ஸ்டெர்லைட் ஆலை ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது !

13.05.2021 12:31:57

 

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விநியோகமும் ஆரம்பமாகியுள்ளது.

4.820 டன் ஒக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  முதற்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.