இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவைஜெனீவாவில் புதிய செயலகம்

28.03.2021 09:29:01

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவைஜெனீவாவில் செயலகமொன்றை ஏற்படுத்தவுள்ளது.

மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்றுநிரூபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செயலகம் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும்.

உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும்.

இதன்; காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

இலங்கையின் யுத்தத்துடன் தொடர்புபட்ட அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம்.