பிரித்தானியாவில் 20 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பிரித்தானியாவில் பெற்றுக்கொண்டுள்ளனர்

28.02.2021 11:10:28

அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 19.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இங்கிலாந்தில் 16.6 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் ஸ்கொட்லாந்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் வேல்ஸில் 916,336 பேரும் வடக்கு அயர்லாந்தில் 515,678 பேரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றவர்களின் எண்ணிக்கை 768,810 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 15 க்குள் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் அளவை வழங்கவுள்ளதாகவும் 16-64 வயதுடையவர்களுக்கும் சில அடிப்படை சுகாதார பிரச்சினைகள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.