Roland-Garros இற்கு திரும்புவதை OPPO கொண்டாடுகிறது !

16.06.2021 09:36:17

டென்னிஸ் விளையாட்டு Roland-Garros இற்கு திரும்புவதை OPPO கொண்டாடுகிறது.

இந்த ஆண்டின் போட்டித் தொடர் OPPO இன் பிரீமியம் கூட்டாளருடன் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தை குறிப்பதுடன் OPPO பரிஸ் கிராண்ட்ஸ்லாமில் முதல் ஸ்மார்ட்போன் கூட்டாளராகவும் முன்னிலைப்படுத்துகிறது.

இப்போட்டித் தொடரில் உலகின் உயர் மட்ட டென்னிஸ் வீரர்கள் பரிஸுக்கு திரும்புவதோடு மட்டுமல்லாது டென்னிஸ் இரசிகர்கள் பிரபலமான பரிஸ் மைதானத்திற்கு திரும்புவதையும் குறிக்கிறது.

புகழ்பெற்ற களிமண் டெனிஸ் மைதானங்களைச் சுற்றி பார்வையாளர்கள் வருவதை கொண்டாடும் வகையில் “Play With Heart” எனும் ஒரு புதிய பிரச்சாரத்தைத் OPPO ஆரம்பிக்கவுள்ளது.

இப்புதிய பிரச்சாரம் Roland-Garros இல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இது தொடர்பில் OPPO அனைத்து சமூக வலைத்தளங்களிலுமுள்ள இரசிகர்களை தங்களுக்கு பிடித்த விளையாட்டுக்கு கௌரவம் செலுத்த ஊக்குவிப்பதுடன் டென்னிஸ் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான காட்சிகளையும் உள்ளடக்கங்களையும் பகிருமாறு வேண்டுகின்றது.

இப்பிரச்சாரம் உலகெங்கிலும் உள்ள சமூக ஊடக செல்வாக்குள்ளவர்களையும் படைப்பாளர்களையும் டென்னிஸ் மீதான தங்கள் அன்பை ஒளிபரப்பவும் பகிர்ந்து கொள்ளவதற்குமாக அழைப்பு விடுக்கிறது.

OPPO வின் Overseas CMO, Gregor Almassy இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் “டென்னிஸின் மீதான அன்பு அவர்களது ஆத்மாவிலிருந்து வருகிறது எனவே இப்பிரபஞ்சத்தின் மிக ஆர்வமுள்ள டென்னிஸ் இரசிகர்களுக்கு அவர்கள் அவ்விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வத்தைக் வெளிப்படுத்தவும், அதனை பகிர்ந்து கொள்ளவும் நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.

“2020 என்பது அனைவருக்கும் குறிப்பாக டென்னிஸ் பிரியர்களுக்கு ஒரு அசாதாரண மற்றும் வெறுப்பூட்டும் ஆண்டாக காணப்பட்டது எனவே நாம் ‘Play With Heart’ (‘இதயத்துடன் விளையாடு’) எனும் பிரச்சாரத்தைத் ஆரம்பிக்கிறோம்.

வெற்றியைத் துரத்துவது போன்ற டென்னிஸில் மிகவும் துடிப்பான தருணங்களின் தனித்துவமான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விரும்பும் இரசிகர்களின் ஆர்வத்திற்கு புத்துயிரளிக்க நாம் விரும்புவதோடு Roland-Garros இற்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம்ஸின் வருகையை இரசிகர்கள் உண்மையிலேயே கொண்டாடும் வகையில் உலகெங்கிலும் உள்ள இரசிகர்களுடன் அதிக அனுபவங்களை தேடி, உருவாக்கவும் நாம் ஊக்குவிக்கிறோம்” என்றார்.