மீண்டும் இலங்கையில் பல ரயில்கள் சேவையில்..

01.05.2021 10:05:14

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.

பயணிகளின் பலத்த வேண்டுகோளின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பின்வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

  • கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை – (தினமும்
  • ரயில்கள்) 2.கொழும்பு கோட்டை- பதுளை -கொழும்பு கோட்டை (தினமும்)
  • கொழும்பு கோட்டை- கண்டி-கொழும்பு கோட்டை(சனி,ஞாயிறு மாத்திரம்)