கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

06.04.2021 08:32:38

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் வாக்களித்தப்பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்கு  ஆய்வுகளை மேற்கொண்டார். இதனையடுத்தே அவர் மேற்படி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கோவை தெற்கு தொகுதியில் நல்ல கூட்டம் உள்ளது.  வெளியே பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது. டோக்கன் கொடுத்து பொருட்களை வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர். அனைத்து இடங்களிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது. இது தொடர்பாக முறைப்பாடு அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.