ஏப்ரல் முதல் 1,000 ரூபாய் சம்பளம் – அரசாங்கம் உறுதி

06.04.2021 08:30:21

 

அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை ஏப்ரல் முதல் வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த உறுதிமொழியினை வழங்கினார்.

அதன் பிரகாரம் அனைத்து தோட்ட நிறுவனங்களும் 1,000 ரோபாயை செலுத்த சட்டப்படி கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வரலாற்றில் முதல் முறையாக தேயிலை, இரப்பர், தேங்காய் மற்றும் ஏற்றுமதிப் பயிர்கள் உள்ளிட்ட சிறு தோட்டத் தொழில்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 1.5 பில்லியனை ஒதுக்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு கடந்த ஆண்டு தேயிலை சிறு பங்குதாரர் அபிவிருத்தி ஆணைக்குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.