மோடியின் முடிவு ஏற்கனவே பல உயிர்களை வாங்கியுள்ளது

08.06.2021 11:58:20

 

பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு ஏற்கனவே பல உயிர்களை வாங்கியுள்ளதாக  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என பெப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் 4 மாதங்களாக அவர் அது குறித்து வாய் திறக்கவில்லை.

கடும் அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் கருத்திற்கு அவர் செவிசாய்த்துள்ளார். இதனை அமுல்படுத்துவதற்கு அவருக்கு 4 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.  தொற்று பரவிய முதலே மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிர்களை வாங்கிவிட்டது. கொரோனா செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.