தொடரைக் கைப்பற்றுமா தென்னாபிரிக்கா !

07.04.2021 09:49:34

 

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 1.30 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இரு அணிக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி, முக்கிய போட்டியாக அமையவுள்ளது.