புலிகளை நினைவு கூர்ந்து கருத்து வெளியிட்டால் கைது!

08.04.2021 09:00:00

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனிமேல் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.