நுவன் சொய்சாவிற்கு 6 வருடங்கள் போட்டித்தடை !

28.04.2021 11:33:10

 

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது 2018 ஒக்டோபர் 31ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவரினால் எவ்விதமான போட்டிகளிலும் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மோசடி தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே 6 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.