யாழில் தரையிறங்கப் போகும் பாரிய விமானங்கள்

06.04.2021 08:00:00

 

இலங்கை மற்றும் தமிழகத்தின் சென்னைக்கான விமான சேவைகளை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாலைதீவை இணைத்து தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், சில விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் யாழ். சர்வதேச விமான நிலையம் மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலைய முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், பாரிய விமானங்களை தரையிறக்கும் வகையில் ஓடுபாதையும் விஸ்தரிக்கப்படவுள்ளது என்றார்.