தமிழ் புலம்பெயர் அமைப்புக்களிடம் அவசர வேண்டுகோள் !

08.05.2021 10:51:45

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவேந்தலில் பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தினை வலிறுத்தவேண்டும் என இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் (ICPPG) கோரிக்கை விடுத்துள்ளது.

இது பொறுப்புக்கூறல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்பதோடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். இலங்கைப் பாதுகாப்பு பிரிவின் தற்போதைய பதில் தலைவராகவும் இராணுவத் தளபதியாகவும் உள்ள சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக் குற்றவாளிகளை 06 யூலை 2020 அன்று நிறுவப்பட்ட பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான (GHR) தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 01 மே 2021 அன்று ஐஊPPபு இனால் பிரித்தானியா மற்றும் உலகெங்குமுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய அரசிற்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள உடனடி வெளியீட்டிற்கான ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.