முதல் முறையாக கீழடியில் மீட்கப்பட்ட தங்க ஆபரணம்

01.05.2021 09:34:49

 

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 7-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இதன்போது 3 குழிகள் தோண்டப்பட்டு பருகுநீர் குவளை சுடுமண்ணால் செய்யப்பட்ட மண்கலன்கள், வட்ட வடிவிலான மூடிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்த நிலையில் முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4 புள்ளி 5 சென்டி மீட்டர் நீளம் மற்றும் 1 புள்ளி 99 சென்டி மீட்டர் விட்டம் அளவு கொண்ட தங்கத்திலான கம்பி கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.