ஒருநாள் சர்வதேச போட்டி – இங்கிலாந்தினை வீழ்த்தியது இந்தியா !

24.03.2021 08:43:31

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 317 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் தவான் 98 ஓட்டங்களையும், கே.எல் ராகுல் 62 ஓட்டங்களையும், குருணால் பாண்டியா 58 ஓட்டங்களையும், விராட் கோலி 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 318 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 66 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொனி பெஸ்ரோ 94 ஓட்டங்கள அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தார்.