இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் மே 18ஆம் திகதியை அனுஷ்டிக்குமாறு அழைப்பு !

12.05.2021 09:41:06

மே 18ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் அந்த மன்றம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில், இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும், மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அந்த மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்தோடு, மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யுமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.