நாட்டில் சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கான அறிவிப்பு

12.05.2021 09:50:55

சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதில் ஒருவர் அனுபவிக்கக்கூடிய பக்க விளைவுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து கொவிஷீல்ட் தடுப்பூசி இலங்கையில் வழங்கப்படும்போதும் இதேபோன்ற வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசி குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஊசி போடப்பட்டவுடன் வலியை உணருவது மிகவும் பொதுவானது என்று தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிடுகிறது.

சிவத்தல், வீக்கம், தூண்டல் ஆகியவை அவ்வப்போது ஏற்படும் எதிர்வினைகள் எனவும் கூறப்படுகிறது.

தலைவலி, காய்ச்சல், சோர்வு, இருமல், குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், பசியற்ற தன்மை, வாந்தி, மலச்சிக்கல் ஆகியவை சினோஃபார்ம் பெற்ற பிறகு எதிர்பார்க்கப்படும் பொதுவான மற்றும் அரிதான எதிர்விளைவுகளாகும் என்று தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிடுகிறது.

சுவை இழப்பு, நடுக்கம், கவனக் கோளாறு, ஆஸ்துமா, உடல் அசௌகரியம், கழுத்து வலி,  தாடை வலி, கழுத்து கட்டி, வாய் புண்கள், பல்வலி, உணவுக்குழாய் கோளாறுகள், இரைப்பை அழற்சிஎ மலம் நிறமாற்றம், கண் பார்வை மங்கலான பார்வை, கண் எரிச்சல், பதற்றம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீர் அடங்காமை மற்றும் தாமதமான மாதவிடாய் ஆகியவை மிகவும் அரிதானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல ஸ்புட்னிக் வி தடுப்பூசி பெற்ற பிறகு பட்டியலிடப்பட்ட குறுகிய கால எதிர்விளைவுகளில் சளி, காய்ச்சல், பொது அசளகரியம் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் எனவும் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிடுகிறது.