நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு

19.01.2021 09:02:28

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை ஜனவரி 23-ந்தேதி கொண்டாட முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பராக்கிராம் திவாஸ் (Parakram Diwas) என்ற பெயரில் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.