பொதுத் தேர்வுகள்,எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் !

07.04.2021 09:38:00

 

பொதுத் தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளார்.

பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த கலந்துரையாடல் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘பல்வேறு துறைகளில் ஏராளமான கேள்விகள் குறித்து புதிய முறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.