பிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று !

28.02.2021 11:11:00

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37 இலட்சத்து 36 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை மேலும் 185 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கையும் 86 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 254,868 பேர் குணமடைந்துள்ளததாகவும் 3,394,816 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.