‘வலிமை’ குறித்து அஸ்வினிடம் கேட்ட மொயின் அலி - வைரலாகும் வீடியோ

17.02.2021 10:15:28

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தன்னிடம் வந்து வலிமை குறித்து கேட்டதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் இரண்டாவது போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பவுண்டரியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடமும், அடுத்த இன்னிங்சில் அதே இடத்தில் பீல்டிங் செய்த இந்திய வீரர் அஸ்வினிடமும், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவங்கள் அரங்கேறின. 

இந்நிலையில், நேற்று யூடியூபில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அஸ்வின், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது குறித்து பேசினார். மேலும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தன்னிடம் வந்து வலிமைனா என்னனு கேட்டதாகவும் அஸ்வின் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.