ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு வேல்ஸில் முழுமையாக பாடசாலை திறக்கப்படுகின்றது ?

19.02.2021 10:00:25

வேல்ஸ் அரசாங்கத் திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆரம்ப பாடசாலை மாணவர்கள், எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி முதல் பாடசாலைக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட், வேல்ஸில் உள்ள வகுப்பறைகளுக்கு அதிகமான மாணவர்களைத் திரும்புவதற்கான திட்டங்களை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிப்பார்.

சில வயதுக்கூடிய மாணவர்களும் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதிக்குள் மீண்டும் பாடசாலைக்குச் செல்லலாம்.

இருப்பினும், வீட்டிலேயே தங்குவதற்கான முடக்கநிலை விதிகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று முதல் ஏழு வயது வரையிலான மாணவர்கள் திங்கள்கிழமை முதல் பாடசாலைக்குத் திரும்புகின்றனர்.