தீயாய் பரவும் தகவல்..

03.05.2021 16:20:26

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் சமீப காலமாக டோலிவுட் திரையுலகுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஷங்கர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும், ராம் பொத்தினேனி நடிக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இந்தப் பட்டியலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார்.

ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், இம்முறை அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இப்படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு சுரேஷ் தயாரிக்க உள்ளாராம். மேலும் இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியாக தமிழில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக ஏ.ஆர் முருகதாஸ் அப்படத்தில் இருந்து விலகியதால், தற்போது நெல்சன் ‘தளபதி 65’ படத்தை இயக்கி வருகிறார்.