ஹூபர்ட் ஹர்காஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் - மியாமி பகிரங்க டென்னிஸ்

03.04.2021 08:51:21

 

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள ஹூபர்ட் ஹர்காஸ், நாளை நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜெனிக் சின்னரை எதிர்கொள்ளவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், போலந்தின் ஹூபர்ட் ஹர்காசும் ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக விளையாடிய ஹூபர்ட் ஹர்காஸ், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.