முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 400 பேர் தலைமறைவு !

20.05.2021 10:04:44

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடிப்பிடிக்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 400 பேர் வரையானவர்களிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 422 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பரிசோதனைக்கு செல்லாமல் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் விபரங்களின் அடிப்படையில் பதுங்கி இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த இடங்களிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதர்கு ஒத்துழைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.