திமுகவினரின் புத்துணர்ச்சி நாள்

03.06.2021 09:51:47

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனை தற்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் திமுகவினரின் புத்துணர்ச்சி நாள் என குறிப்பிட்டு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொலியில் மேலும் தெரிவித்துள்ள அவர், ”யாரிடம் இருந்து பாராட்டு வரவில்லையோ அவர்களே பாராட்டும் வகையில் நடத்துகொள்ள வேண்டும் என கருணாநிதி கூறியதைபோல, தேர்தலில் தி.மு.க வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் உட்பட பலரது பாராட்டுக்களையும் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறேன்.

நான் செயலாற்ற காரணம் என்னுள் இருந்து செயல்பட வைப்பவர் கருணாநிதி”  எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.