அயர்லாந்தில் முடக்க செயற்பாடுகள் நீடிப்பு!

20.02.2021 11:39:46

பிரேசிலில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அயர்லாந்தில் அடையாளங் காணப்பட்டதையடுத்து முடக்க செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து சுகாதார அமைச்சினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

பிரேசிலில் அடையாளங்காணப்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்று சுமார் 19 நாடுகளில் பரவியுள்ளன.

இந்த நிலையில் குறித்த நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.