நடிகர் பார்த்திபன் கமலுக்குடுவிட்டரில் பாராட்டு !

04.05.2021 10:38:21

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனுக்கும் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இறுதியில் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனுக்கு 51,481 வாக்குகளும் வானதிக்கு 53,209 வாக்குகளும் கிடைத்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மயுரா ஜெயக்குமார் 41,426 வாக்குகளைப் பெற்றார்.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் “திரு கமல் அவர்களின் வெற்றி என்பது, வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே” என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார். முதல் தடவை போட்டியிட்டு கடும் போட்டியை வழங்கிய கமல்ஹாசனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை சமூக வலைத்தளங்களின் ஊடாகத் தெரிவித்து வருகின்றனர்.