இடைநிறுத்தப்படுமா நாணயநிதியக்கடன்..!

28.03.2023 22:00:00

கொரோனா பெருந்தொற்றுக்காலத்தின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் என்பது மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.

குறிப்பாக மக்கள் விலை வாசி அதிகரிப்பாலும் நாணய பெறுமதி இழப்பாலும் மிக கடினமான ஒரு சூழலை எதிர்நோக்கவேண்டியிருந்தது

இதனால் நாடுதளுவிய போராட்டங்கள் இனம்பெற்றதோடு அரசியல் ரீதியாக மிகப்பெரும் மாற்றங்கள் கூட உருவாகியிருந்தது

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்காக சர்வதேச நாணய நிதியக்கடனை எதிர்பார்த்திருந்த இலங்கைக்கு பல்வேறு நிபந்தனைகளின் கீழ் குறித்த கடன் உதவ வழங்குவதற்கான ஒப்புதலை சர்வதேசய நாணயநிதியம் வழங்கியிருந்தது

இவ்வாறான சூழலில் சிறிலங்காவை பொறுத்தவரை அதிகமான அரச ஊழியர்படை காணப்படுகின்றமை அதிலும் அரச இராணுவம் என்பது அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது

சிறிலங்காவை பொறுத்த வரை ஏற்கனவே 16 தடவை சர்வதேச நாணயக்கடனுக்கான ஒப்புதல் பெறப்பட்ட போதிலும் 14 தடவைகள் நாணய நிதிய நிபந்தனைகளை நிறைவேற்றமுடியாமல் கடன் உதவியை பெற முடியாத ஒரு சூழல் உருவாகியிருந்தது

இப்போது 17 வது தடவையும் அதேபோன்ற ஒரு நிலமை உருவாகக்கூடுமோ என்ற அச்சத்தை பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டுவருகிறார்கள்