திருவண்ணாமலை கோவிலில் படம் வெற்றியடைய பிரார்த்தனை !

10.01.2021 10:42:40

ஜனவரி 13-ந் தேதி மாஸ்டர் படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம், வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பின் வெளியாக உள்ளதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டி, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் அர்ஜுன் தாஸ், லல்லு மற்றும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் ஆகியோர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலில் படக்குழுவினருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.