நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாட்டு

04.05.2021 10:32:16

 

 நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாட்டு அமுல்படுத்துவது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.