ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை

09.01.2021 11:37:39

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது என அவர் கூறி உள்ளார்.