தென்னாபிரிக்கா அணியில் மேலும் ஒரு மாற்றம்!

31.12.2020 10:32:57

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென்னாபிரிக்கா அணியில், மேலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அணியில் இடம்பெற்றுள்ள மைக்கேல் பிரிட்டோரியஸை விடுவித்து பியூரன் ஹென்ட்ரிக்ஸைக் அணிக்குள் கொண்டுவர அணிநிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ககிசோ ரபாடாவை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் முதல் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்த தென்னாபிரிக்கா அணி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது