ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்துடன் தொடர்பான காணொளி காட்சிகளை ருவிட்டரில் பதிவேற்றியுள்ளது.

01.02.2021 08:00:00

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம், தனது  ருவிட்டர் பதிவில் இலங்கைக்கு எதிராக வெளியிட்டுள்ள காணொளிக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவு தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் குறித்த செயற்பாடு சிறந்ததொன்று அல்ல.

மேலும் ஆணையகம், தனது ருவிட்டர் பதிவில், கடந்த கால மனித உரிமை மீறல்களை இலங்கை கவனிக்கத் தவறியுள்ளது. ஆகையினால் மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளது.

மேலும் இலங்கை நடைபெற்ற யுத்தத்துடன் தொடர்பான காணொளி காட்சிகளையும் ருவிட்டரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம்  பதிவேற்றியுள்ளது.

இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் நல்லிணக்கத்துக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள யு.என்.எச்.ஆர்.சியின் அடுத்த அமர்வில் இலங்கை விவகாரம் குறித்து, ஆய்வுக்கு பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.