பிகில் பட தயாரிப்பாளரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பவித்ரா.... நடிக்கிறார்.

08.04.2021 10:44:53

விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் நடிகை பவித்ரா லட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த நடிகை பவித்ரா லட்சுமி, குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார். 

இந்நிலையில், நடிகை பவித்ரா, கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பிரவீன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.