லெய்செஸ்டர் அணி சிறப்பான வெற்றி - இங்லீஷ் பிரீமியர் லீக்

27.04.2021 10:37:41

இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், கிறிஸ்டல் பெலஸ் அணிக்கெதிரான போட்டியில், லெய்செஸ்டர் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கிங் பவர் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில், லெய்செஸ்டர் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் லெய்செஸ்டர் அணி சார்பில், திமோதி காஸ்டாக்னே 50ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கெலேச்சி 80ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

இதேவேளை கிறிஸ்டல் பெலஸ் அணி சார்பில், வில்பிரைட் சாஹா 12ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

நடப்பு ஆண்டுக்கான புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை லெய்செஸ்டர் அணி, 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் கிறிஸ்டல் பெலஸ் அணி 38 புள்ளிகளுடன் 13ஆவது இடத்திலும் உள்ளன.