டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டு பிளெசிஸ்!

17.02.2021 09:56:38

 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

36 வயதான இவர் 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல நேரம் சரியாவுள்ளது”  என  ஃபாஃப் டு பிளெசிஸ் குறிப்பிட்டுள்ளார்.