உலக மருத்துவதுறைக்கு சவால் விடுத்துள்ள இஸ்ரேல்

03.06.2021 09:45:05

 

120 வயதுவரை ஆயுளை அதிகரிக்கும் வகையிலான மருந்தை கண்டுபிடித்துள்ள இஸ்ரேல் உலக மருத்துவத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலிகளைக் கொண்டு ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருப்பதாகவும், இதற்கமைய எலிகளின் ஆயுட்காலத்தை 23 சதவீதத்தினால் அதிகரிக்க முடிந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

SIRT6 என்ற புரோட்டீனை அதிகரிக்கின்ற இந்த ஔடதம் சுகதேகியாகவும், ஆயுளை அதிகரிக்கும் சக்தியையும் சரீரத்திற்கு அளிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பார்-இலான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹயிம் கொஹேன்,

மனிதர்களிடத்திலும் இந்தப் பரிசோதனையை நடத்திப்பார்க்கலாம் என்று இஸ்ரேல் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.