மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு !

28.02.2021 11:13:58

மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் லொறியொன்றில் சென்ற துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் இளைஞர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாதலஜாரா பகுதியில் உள்ள நகராட்சியான டோனாலாவில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 10 பேர் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞரும், யுவதியும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவியேறிய, ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், வன்முறையை குறைப்பதாக உறுதியளித்தபோதும் மெக்ஸிகோவில் படுகொலைகள் தொடர்ந்தும் அரங்கேறி வருகின்றது.

2020 டிசம்பரில், முன்னாள் ஜலிஸ்கோ ஆளுனர் அரிஸ்டோடெல்ஸ் சாண்டோவால் கடற்கரை நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் உள்ள ஒரு உணவகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.