10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக

02.05.2021 11:11:00

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. 

மதிய நிலவரப்படி மொத்த உள்ள 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் 116 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த முன்னிலை நிலவரங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் வர வாய்ப்பு இல்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உள்ளது. இதனால் திமுகவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 

தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால் தொண்டர்கள் வீதிக்கு வந்து கொண்டாட வேண்டாம் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.