மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே இந்தியாவில் கொரோனா பரவ காரணம் – WHO

14.05.2021 10:21:28

இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.167.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டுமே 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகியுள்ளது.

சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.