மூன்று நாட்கள் இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி முடக்கநிலை அறிமுகம் !

03.04.2021 09:37:09

 

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன. இதன்பொருள் அங்கு மிக உயர்ந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடுகையில், ஒரு நாளைக்கு சுமார் 20,000 புதிய தொற்றுகள் உள்ளன.

அத்தியாவசியமற்ற இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது,.ஆனால் மக்கள் தங்கள் வீடுகளில் ஈஸ்டர் உணவை மற்ற இருவருடன் சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

தேவாலயங்களும் திறந்திருக்கும். ஆனால் வழிபாட்டாளர்கள் தங்கள் சொந்த பிராந்தியங்களுக்குள் சேவைகளில் கலந்து கொள்ளுமாறு கூறப்படுகிறார்கள்.

இரண்டாவது ஆண்டாக, போப் பிரான்சிஸ் தனது ஈஸ்டர் செய்தியை வெற்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வழங்குவார்.