காலிறுதி போட்டியில் முக்கிய வீராங்கனைகள் மோதல் - அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்

15.02.2021 11:17:13

இந்த ஆண்டியின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இடம்பெற்று வருகின்றது.

விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் இந்த தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிக்கு முக்கிய வீராங்கனைகள் நுழைந்துள்ளனர்.

அந்தவகையில் நாளை இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஹசிசுவே மற்றும் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதவுள்ளனர்.

இதேவேளை மற்றுமொறு காலிறுதி போட்டியில், முன்னாள் உலக முதல்நிலை வீராங்கனைகளான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் சிமோனா ஹாலெப் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

மேலும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மற்றுமொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் அமெரிக்கவின் ஜெனிபர் பிராடியும் சகவீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் மோதவுள்ளனர்.