இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 271 ஓட்டங்களை பெற்றுள்ளது.

24.03.2021 08:45:23

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 271 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமாகிய குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்று 102 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

அவ்வணி சார்பாக கோர்ன்வல் 61 ஓட்டங்களையும் ஜோசுவா ட சில்வா 46 ஓட்டங்களையும் ஜோன் கம்ப்பெல் 42 ஓட்டங்களையும் பெற்றுகொடுன்னார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லக்மல் 5 விக்கெட்களையும் விஸ்வ பெர்னாண்டோ மற்றும் சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில்102 ஓட்டங்கள் பின்னிலையுடன் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.