ட்ரம்பிற்கு எதிராக அணிதிரளுங்கள் -அமெரிக்க சபாநாயகர் அழைப்பு

11.01.2021 10:47:35

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஜனாதிபதி டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படும் என சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

சக ஜனநாயக கட்சி எம்பிக்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அது தொடர்பான வாக்கெடுப்புக்கு தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரம், டிரம்ப் இனியும் பதவியில் நீடிக்க கூடாது என்பதால், அரசியலமைப்பின் 25 ஆவது சட்டதிருத்தத்தின் படி, டிரம்பை பதவியில் இருந்து நீக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமாக இருக்கும் எனவும் பெலோசி தெரிவித்துள்ளார்.