இலங்கை டெஸ்டின் முதல்நாள் முடிவு: நஜ்முல் ஹொசைன் சதத்துடன் வலுவான நிலையில் பங்களாதேஷ்!

22.04.2021 10:53:45

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது களத்தில் மொமினுல் ஹக் 64 ஓட்டங்களுடனும் நஜ்முல் ஹொசைன் 126 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பல்லேகல மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களை பெற்றது.

இதில் பங்களாதேஷ் அணி சார்பில், டமீம் இக்பால் 90 ஓட்டங்களுடனும் சய்ப் ஹசன் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், விஷ்வ பெனார்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, இன்று பங்களாதேஷ் அணி தொடரவுள்ளது.