அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிப்பு!

07.01.2021 09:00:50

 

சிட்னியில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளதுடன், சைனி அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.

அத்துடன், இந்திய அணியிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். கடந்த டெஸ்டில் விளையாடிய உமேஷ் யாதவ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதற்கமைய அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், நவ்தீப் சைனி.