ஒரு டோஸ் தடுப்பூசி அளவுக்கூட 130 நாடுகளுக்கு கிடைக்கவில்லை: ஐ.நா. கவலை !

19.02.2021 09:58:02

சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்போது கருத்துதெரிவித்த குட்டரெஸ், ‘சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை.

வெறும் 10 நாடுகளுக்கு சுமார் 75 சதவீதம் கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும்’ என கூறினார்.