இரண்டு விக்கெட்களை இழந்தது இந்தியா!

10.01.2021 10:15:25

 

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்பாய்ட் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி ஆட்டநேர முடிவில் 2விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பாக ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும் சுப்மான் கில் 31 ஓட்டங்களையும் பெற்று அட்டமிழந்துள்ளனர்.

புஜாரா 9 ஓட்டங்களுடனும் அஜிங்க்ய ரஹானே 2 ஓட்டங்களுடன் அட்டமிழக்காமல் இருக்க நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

சித்தினி மைதானத்தில் ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களே மீத்திறம் பெற்று 94 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

டெஸ்ட் தொடரின் இறுதி நாளான நாளை மேலும் 8 விக்கெட்கள் கைவசம் இருக்க இந்தியா அணி 309 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.