விரைவில் முக்கிய ஆசனமொன்றில் வருகிறது மாற்றம் ?

27.05.2021 12:05:28

 

ஆளுங்கட்சியில் உள்ள பதவி ஒன்று விரைவில் மாற்றமடைய உள்ளதாக கட்சி உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி ஆளுங்கட்சி பிரதி அமைப்பாளர் பதவியே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரமித்த பண்டார தென்னக்கோனுக்கு இப்பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

ஆளுங்கட்சி பிரதி அமைப்பாளர் பதவி 4 வகையாக உள்ளதோடு அதில் ஒருவரே இவ்வாறு மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.